விமானத்தில் பின்னழகை திடீரென தூக்கி காட்டி இளம் பெண்! செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட விபரீதம்!

அமெரிக்க விமானத்தில் குடிபோதையில் தன் பின்புறத்தை ஆட்டிக் காண்பித்து தகராறில் ஈடூபட்ட பெண் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


ஓர்லாண்டோவில் இருந்து நியூயார்க்குக்கு புறப்பட அந்த விமானம் தயாராக இருந்தது. இந்நிலையில் விமானத்தில் இருந்த ஒரு பெண் பயணியிடம் விமானம் புறப்படத் தயாராவதாகவும், செல்ஃபோனை அணைத்து வைக்குமாறும் ஊழியர் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது

ஆனால் அந்தப் பெண் குடிபோதையில் இருந்ததாகவும், விமான ஊழியர்களைப் பார்த்து ஆத்திரத்துடன் கூச்சலிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை விமானத்தில் இருந்த சக பயணிகள் படம் பிடித்ததைக் கண்டு மேலும் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண் பயணிகளைப் பார்த்து தனது ஆடை விலகும் அளவுக்கு பின்புறத்தை ஆட்டிக் காண்பித்தார். 

அந்தப் பெண்ணின் ஆத்திரமும், தகராறு செய்யும் போக்கும் தொடர்ந்து அதிகரித்ததையடுத்து வேறு வழியின்றி அந்தப் பெண்ணை விமானத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றினர். அந்தப் பெண் வெளியேறிய போது மற்ற பயணிகள் உற்சாகக் கூக்குரலிடும் காட்சிகளும் விடியோவில் பதிவாகியுள்ளன.