வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தமிழச்சி! அனைவரையும் நெகிழ வைத்த செயல்!

வெளிநாட்டில் படித்து வரும் மாணவி தான் பிறந்த கிராமத்தை தத்து எடுத்துள்ள சம்பவமானது அனைவரையும் நெகிழ செய்துள்ளது.


தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் அமைந்துள்ளது. மாவட்டத்துக்கு உட்பட்ட மேலவெள்ளூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சரளா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். இத்தம்பதியினருக்கு காவியா என்ற மகள் உள்ளார்.

அவர் அமெரிக்கா நாட்டின் கலிஃபோர்னியா மாகாணத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தங்கள் சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் தவறாது 3 பேரும் கலந்து கொள்வர். 

இந்த ஆண்டு கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற மாதம் இவர்கள் மேலவெள்ளூர் கிராமத்திற்கு வந்தனர். அப்போது கிராமத்தின் முக்கிய நீர் ஆதாரமான பெரிய ஊரணி சரியாக பராமரிக்கப்படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சீமை கருவேலமரங்கள் பெரிய ஊரணியில் மண்டிக்கிடந்தன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூர் வாராமல் இருந்ததை கண்டு அவர் வேதனையுற்றார்.

இதுகுறித்து கிராமத்து மக்களிடம் விசாரித்த போது, ஊரணியில் சுத்தம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். காவியா தன் தந்தையுடன் கலந்தாலோசித்து மாவட்ட ஆட்சியருக்கு மனு எழுதி அனுப்பினார். மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் தற்போது தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். 

வெளிநாட்டில் இருந்து வந்து சொந்த கிராமத்தில் மேல், இத்தனை அக்கறை காட்டும் சரவணன் குடும்பத்தினரை கிராமத்து மக்கள் போற்றி புகழ்ந்து வருகின்றனர்.