ஷாப்பிங் மால் பயங்கரம்! முன் பின் தெரியாதவனால் இளம் பெண்ணின் 5வயது மகனுக்கு நேர்ந்த கொடூரம்!

மின்னசோட்டாவின் ப்ளூமிங்டன் நகரைச் சேர்ந்த ஒரு பெண் தனது 5 வயது மகனுடன் வணிக வளாகத்துக்குச் சென்றார்.


அந்த வணிக வளாகத்தில் 3-வது மாடியில் மகனை அருகில் விட்டுவிட்டு அந்தப் பெண் தனக்குத் தேவையான பொருட்களை தேர்வு செய்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது தனது மகனை நெருங்கிய நபர் அவனை தூக்கி வீசப்போகிறான் என்று அந்தப் பெண் எதிர்பார்க்கவில்லை. விபரீதத்தை உணர்ந்து சுதாரிக்கும் மும் காரியம் கைமீறிப் போயிருந்தது. அந்தச் சிறுவனை அவன் அங்கிருந்து அந்தச்  சிறுவனை கண்ணிமைக்கும் நேரத்தில் வீசிவிட்டான்.

அந்தப் பெண்ணின்  அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மற்ற வாடிக்கையாளர்களும் அங்காடி ஊழியர்களும் அந்த நபரை வளைத்துப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுவன் அபாய கட்டத்தை கடந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனைத் தூக்கி வீசிய நபரான இம்மானுவேல் தேஷான் அரண்டா என்பவன் மீது கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பல்வேறு வணிக வளாகங்களில் பெண்களைத் தாக்கியது, பொருட்களையும், சொத்துக்களையும் உடைத்து தகர்த்தது உள்ளிட்ட வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவன் உயரத்தில் இருந்து பொருட்களை வீசியெறியும் ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.