அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை! வெள்ளை மாளிகை மருத்துவர்கள் தகவல்!

கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று வெள்ளை மாளிகை மருத்துவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தன்னுடைய மிகப்பெரிய தாக்கத்தை பரப்பி வருகிறது. இதனால் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ள மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கில்லை.

இதுவரை அமெரிக்காவில் சுமார் 1700 பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை 41 பேர் பரிதாபமாக இந்த நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும்படி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இதற்காக 50 பில்லியன் டாலர்களையும் ஒதுக்கி இருக்கிறார். இந்நிலையில் அதிபர் டொனால்டு டிரம்பை பார்ப்பதற்காக பிரேசில் நாட்டை சேர்ந்த அதிகாரி ஒருவர் வந்திருந்தார். அந்த அதிகாரிக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆனது.

ஆகையால் அதிபர் டொனால்டு டிரம்ப் தனக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா என ஆய்வு செய்து பார்க்க போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு செய்யப்பட்ட கொரோனா ஆய்வு முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன.

அதாவது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று வெள்ளை மாளிகை மருத்துவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு அமெரிக்க மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.