குழந்தை வரம் கேட்டுச் சென்ற பெண்ணுக்கு குழந்தை கொடுத்த டாக்டர்! ஆனால் டிஎன்ஏ சோதனையில் அம்பலமான விபரீதம்!

அமெரிக்காவில் மகள் பரிசாக வழங்கிய DNA பரிசோதனை கருவியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் DNA பரிசோதனை செய்துள்ளனர். இந்நிலையில் பரிசோதனை அறிக்கை வந்ததும் குடும்பமே இரட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


அமெரிக்காவின் டேல்வேர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் மற்றும் இவரது மனைவி ஜெனிபர், இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளனர்.பின்னர் இருவரும் செயற்கை முறையில் குழந்தை பெற்று  கொள்ளலாம் என முடிவு செய்து செயற்கை கருத்தரித்தல் மையம் சென்றுள்ளனர்

பின்னர் செயற்கை முறையில் கரு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மூவரும் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் அவரது மகள் ரிபிகா தனது குடும்பத்திற்கு DNA பரிசோதனைக் கருவியை பரிசாக அளித்துள்ளார். இந்நிலையில் அவரது தந்தை ஜோசப் விளையாட்டாக குடும்பத்தில் உள்ள மூவரின் DNA பரிசோதனை செய்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு மாதம் கழித்து பரிசோதனை அறிக்கை வந்த உடனேயே குடும்பமே இரட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அது என்னவென்றால் தங்களது மகள் தங்கள் மகளை இல்லை எனவும் அக்குழந்தைக்கு தந்தை வேறு யாரோ என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். சோதனை அறிக்கையில் தந்தையின் DNA மகளின் DNA விற்கு கொஞ்சம் கூட ஒத்துப்போகவில்லை என்பதை உறுதி செய்தனர். 

இந்நிலையில் இது குறித்து செயற்கை கருத்தரித்தல் மையம் சென்று விசாரித்த போது அங்கு அவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது உண்மையிலேயே அக்குழந்தையின் தந்தை அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவருடைய குழந்தை என்பது தெரியவந்தது. இந்நிலையில் ஜோசப் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு நம்பி சென்றால் அங்குள்ள மருத்துவர்கள் இந்த மாதிரியாக செயல்படுவது தனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் ஜோசப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த மருத்துவமனை மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் செயற்கை கருத்தரித்தல் மையத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.