பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்! இடுப்பு வலியால் துடிதுடித்து உயிரிழந்த கர்ப்பிணி! அதிர வைக்கம் சம்பவம்!

பெட்ரோல் இல்லாததால் ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்ற சம்பவத்தில் கர்ப்பிணி பெண் உயிருடன் இருப்பது ஒரிசாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஒரிசா மாநிலத்தில் மயூர்பாஞ்ச் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு சித்தரஞ்சன் முண்டா என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மனைவியின் பெயர் துளசி முண்டா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் வெள்ளிக்கிழமையன்று மாலை நேரத்தில் பிரசவ வலியால் துடித்துள்ளார்.

அவரை உடனடியாக அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு துளசியை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால், பர்பிடா என்ற பகுதியிலுள்ள பண்டிட் ரகுநாத் முர்மா அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

உடனடியாக பொதுமக்கள் அவசர உதவி என்னை அழைத்தனர் ஆனால் ஆம்புலன்ஸ் வராததால் தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்தனர். தனியார் ஆம்புலன்ஸில் மனைவியுடன் சித்தரஞ்சன் முண்டா சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பெட்ரோல் காலியானதால் ஆம்புலன்ஸானது நடுவழியில் நின்றது எவ்வளவு முயன்றும் வாகனத்திற்கு பெட்ரோல் கிடைக்கவில்லை.

மற்றொரு ஆம்புலன்ஸ் செய்யும் அழைத்து முயற்சித்தனர். அவ்வளவு நேரமும் துளசி பிரசவ வலியால் கடுமையாக துடித்து கொண்டிருந்தார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது உடனடியாக துளசியை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு துளசியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டவுடன் சித்தரஞ்சன் கடுமையாக மனமுடைந்தார்.

மயூர்பாஞ் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி கூறுகையில், "இந்த துயரமான சம்பவத்தைப் பற்றி இன்று காலை நான் அறிந்து கொண்டேன். இந்த சம்பவமானது என் மனதை வாட்டி வதைக்கிறது. தனியார் ஆம்புலன்சில் எரிபொருள் இல்லாததால் நடுவழியில் நின்றது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்து கண்டிப்பாக விசாரணை நடத்துவேன்"என்று கூறினார்.

இந்த சம்பவமானது ஒரிசா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.