தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் வெள்ளைப்பூண்டு.. இன்னும் பல மருத்துவ குணங்களுடன்..

அனைத்து உணவுகளிலும் ஏதேனும் ஒரு வகையில் பூண்டு சேர்க்கும் பழக்கம் பெரும்பாலோருக்கு உண்டு. இதற்குக் காரணம் அதன் அதீத மருத்துவக் குணமே.

             

  • உடம்பில் கொழுப்பு சேராமல் தடுக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. அதோடு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.
  • தாய்ப்பால் போதுமான அளவுக்கு சுரக்காத பெண்களுக்கு தினமும் இரவு பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் பால் பெருகும்.
  • பெண்களுக்கு கருப்பையில் சேரும் கசடுகளை அகற்றும் தன்மையும் ரத்தக் குழாயில் தசைகளை வலுப்படுத்தும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.
  • ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆசைப்படுபவர்கள் தினமும் இரவு மூன்று பூண்டுகள் சாப்பிட்டால் போதும், நல்ல தூக்கம் கிடைக்கும்.