இயக்குனர் விஜயின் இரண்டாவது திருமணத்திற்கு அவரின் முன்னாள் மனைவி அமலா பால் வாழ்த்து தெரிவித்துள்ளார்
அதிக குழந்தை பெத்துக்கோ விஜய்! முதல் கணவனுக்கு அமலா பால் கொடுத்த ஐடியா!

இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலா பால் இருவரும் சில வருடங்களுக்கு முன்னாள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். மூன்று வருடம் கணவன் மனைவியாக வாழ்ந்த இந்த தம்பதியினர் தங்களுக்குள் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் முறையாக விவாகரத்து விண்ணப்பம் செய்து விவாகரத்து செய்தனர்.
இந்நிலையில் இயக்குனர் விஜய் அவர்களின் இரண்டாவது திருமணம் சமீபத்தில் எளிதான முறையில் நடைபெற்றது. இவர் டாக்டர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இது பற்றி கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நடிகை அமலா பால், இயக்குனர் விஜய் ஒரு நல்ல மனிதர். இந்த தம்பதியினர் சந்தோசமாக வாழ்வதற்கும், அதிக குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் நான் வாழ்த்துகிறேன் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார்.
விவாகரத்து செய்து கொண்ட முன்னாள் கணவரின் 2வது கல்யாணத்திற்கு வாழ்த்து சொல்லவும் நல்ல உள்ளம் வேண்டும் என்று அனைவரின் பாராட்டுகளை பெற்று வருகிறார் நடிகை அமலா பால்!