எப்படி இருக்கிறது மாம்பழம்? புகைப்படத்தை வெளியிட்டு அமலா பால் கேட்ட டபுள் மீனிங் கேள்வி!

நடிகை அமலா பால் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படமும் அதோடு அவர் கூறி இருக்கும் இரட்டை அர்த்தத்துடன் கூடிய வசனமும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களிடையே வைரலாக பரவி வருகிறது.


சிந்து சமவெளி படத்தில் அறிமுகமான நடிகை அமலா பால் தனது முதல் படத்திலேயே அனைவரையும் ஈர்த்தார். மேலும் அவர் நடித்த மைனா மற்றும் வேட்டை, தலைவா, ராட்சசன் ஆகிய படங்கள் ஹிட் படங்களாகும்.இவர் சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணம் ஆன ஒரு சில வருடங்களில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்பு சினிமாவில் முழு வீச்சுடன் களமிறங்கிய அமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். 

மேலும் இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்ட ஒரு கவர்ச்சியான போட்டோ ட்ரெண்டிங் ஆக உள்ளது. மஞ்சள் நிற டீ ஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள அந்த போட்டோவுடன் " அவர்கள் நான் எப்படி நினைக்கிறேனோ அப்படி இருக்கலாம்  என்று கூறுகிறார்கள். ஆகவே நான் மகிழ்ச்சியான மாம்பழமாக இருக்கிறேன்" எனவும் கூறியுள்ளார். இந்த இரட்டை வசனத்தால் நெட்டிசன்கள் அமலா பாலை வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.