ஆண்களின் அது எனக்கு ரொம்ப பிடிக்கும்! வெட்கத்தை விட்டு சொன்ன அமலா பால்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான அமலாபால், லுங்கியுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.


இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபால். பின்னர் நடிப்பதை நிறுத்தி கொண்டார். ஆனால் விஜய்யை விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். கடந்த ஆண்டு விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ராட்சசன் படத்தில் இவர் நடித்திருந்தார். 

 

மாபெரும் ஹிட்டான இப்படத்தில் இவரது கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது தமிழில் ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல ஆகிய படங்களில் அமலாபால் நடித்து வருகிறார்.

 

  மலையாளத்தில் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கும் ஆடு ஜீவிதம் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தொலைதூரப் பயணங்கள் மேற் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். தனது பயணம் தொடர்பான தகவல்களையும் அவ்வப்போது ரசிகர்களுக்கு தெரிவித்த வண்ணம் இருப்பார்.

 

   இந்த நிலையில் லுங்கி அணிந்தபடி போஸ் கொடுக்கும் அமலா பாலின் புகைப்படம் இணையதளத்தை கலக்கி வருகிறது. இந்த படத்தை வெளியிட்டுள்ள  நடிகை அமலாபால், லுங்கி தனக்கு மிகவும் பிடித்த ஆடை என்றும் இது பொய் இல்லை என்றும் பதிவிட்டுள்ளார். 

 

மேலும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த ஐந்து விஷயங்களை எழுதுமாறு அமலாபால் கேட்டுக்கொண்டுள்ளார். உலகம் அன்பானதாக இருக்க வேண்டும் என்றால் முதலில் உங்களை நீங்களே காதலிக்க வேண்டும் என்று ரசிகர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

   இந்தப் புகைப்படத்திற்கு வரவேற்பு இருக்கும் அதேவேளையில் சிலர் கலாய்த்து தள்ளுகின்றனர். முன்னாள் கணவர் விஜய்யை வெறுப்பேற்றுவதற்காகவே அமலாபால் இது போல் நடந்து கொள்வதாகவும் பேச்சு அடிபடுகிறது.