அமலா பாலுக்கு ரூ.18 லட்சம் விவகாரம்! புதுச்சேரி அரசுக்கு கேரளா எழுதிய கடிதம்!

போலி இருப்பிட சான்றிதழின் மூலம் பென்ஸ் கார் வாங்கிய குற்றத்திற்காக அமலாபால் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


2017-ஆம் ஆண்டில் புதுச்சேரியில் அமலாபால் சொகுசு பென்ஸ் கார் வாங்கினார். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் அமலாபால். ஆனால் பென்ஸ் கார் வாங்கும்போது போலி இருப்பிட சான்றிதழை சமர்ப்பித்து காரை பதிவு செய்தார். இதன் மூலம் கிட்டத்தட்ட 18 லட்சம் ரூபாயை அமலாபால் வரிஏய்ப்பு செய்துள்ளார்.

இதனை பின்னர் அறிந்துகொண்ட புதுச்சேரி போக்குவரத்து துறை மையம் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புதுச்சேரி சட்டத்துறையிடம் ஆலோசனை நடத்தியது. அதன்படி புதுச்சேரி சட்டத்துறை கேரள மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது.

வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில், விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேரள காவல்துறையினர் புதுச்சேரி சட்டத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதுதொடர்பாக எந்த முறையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து புதுச்சேரியின் போக்குவரத்து துறையும் சட்டத்துறையும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.