IPL வரலாற்றில் புதிய சாதனை! அறிமுக போட்டியிலேயே இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்த மும்பை வீரர்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை எடுத்தது.மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்ட் மட்டும் சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் 46 ரன்களை எடுத்தார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சித்தார்த் கவுல் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக அல்ஜாரி ஜோசப்பின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அல்ஜாரி ஜோசப் 12 ரன்களை மட்டும் விட்டு கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர் அணைத்து விக்கெட்களையும் இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அல்ஜாரி ஜோசப் தனது அறிமுக போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலமாக அறிமுக போட்டியில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். மேலும் இவர் IPL வரலாற்றில் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்று சாதனையும் செய்துள்ளார்.