எவ்வளவோ சொல்லியும் கேட்கல! புரிஞ்சிக்கல! அதான் ரகசியமாக தாலி கட்டுனேன்! அல்யா கணவர் வெளியிட்ட ரகசியம்!

ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ராஜா ராணி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்டவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகியோராவர். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் அவர்களது வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாக ஈசிஆரில் உள்ள கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். முன்னதாக இவர்கள் இருவருக்கும் விஜய் டிவி மேடையில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர்களைப் போல் ஏற்கனவே ரீல் ஜோடியாக, சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ரியல் ஜோடியாக வாழ்வில் இணைந்த தம்பதியினர் தான் சரவணன்மீனாட்சி செந்திலும் ஸ்ரீஜாவும். தற்போது இவர்களைப் போல் விஜய் டிவியின் சீரியலின் இரண்டாவது ஜோடியாக திகழ்பவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதியினர். நடிகை ஆலியாவின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால் இவர்கள் இருவரும் கடந்த மே மாதம் 27ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளனர் திருமணத்திற்குப் பின்பும் இவர்களுக்கு திருமணமான செய்தியை எவரிடமும் கூறாமல் மறைத்து வைத்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் தற்போது திருமண வரவேற்பு செய்வது குறித்து செந்திலிடம் பேசியிருக்கிறார். இதனை அறிந்த செந்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனது குறித்து வாழ்த்துச் செய்தியை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார் . அடுத்து சஞ்சீவ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தனக்கும் ஆலியாவுக்கும் திருமணமான செய்தியை மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.