திருமணமாகி மூன்றே மாதத்தில் கர்ப்பம்..! பேரும் சோகத்தில் ராஜா ராணி செம்பா! மனதை உலுக்கும் காரணம்!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியலில் கணவன் மனைவியாக நடித்தவர் ஆலியா மானசா- சஞ்சீவ் தம்பதியினர். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இருவரும் காதல் வசப்பட்டனர்.


இவர்கள் இருவரின் திருமண செய்தி இவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை உண்டாக்கியது. இந்த ஜோடி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக காதல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் மற்றும் மானசா தம்பதியினர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது சஞ்சீவ் அதே மேடையில் தன்னுடைய மனைவி ஆலியா மானசா கர்ப்பமாக இருக்கும் தகவலை தன்னுடைய ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார்.

இதனை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர். மேலும் இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கவேண்டிய நடிகை ஆலியா மானசா பெரும் சோகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 அதாவது இவர்களது திருமணத்தை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத நிலையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் .ஆகையால் நடிகை ஆலியாவின் தாயார் தன் மகள் மீது மிகவும் கோபம் கொண்டு பேசாமல் இருக்கிறாராம். 

ஆனால் தன் மகள் கர்ப்பமாக இருக்கும் இந்த சூழ்நிலையிலும் பேசாமல் இருப்பது ஆல்யா மானசாவிற்கு பெரும் சோகத்தை உண்டாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகை ஆலியா, தனக்கு குழந்தை பிறந்தவுடன் முதலில் அதை தன் தாயாரிடம் தான் கொடுக்க வேண்டும் என்பது ஆசையாம். ஆகையால் அவர்கள் விரைவில் தங்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவார் என்பது தனக்கு நம்பிக்கை இருப்பதாக சஞ்சீவ் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.