முஸ்லீமாக மதம் மாறிய ராஜா ராணி செம்பா! காதலன் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

சீரியலில் நடிப்பவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல.


அந்த வகையில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் தான் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகியோராவர். இந்த தொடரில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாகவும் சஞ்சீவ் கதாநாயகனாகவும் நடித்து வந்தனர் . இந்த சீரியலுக்கு பலதரப்பினரும் ரசிகர்களாக உள்ளனர். தற்போது இந்த சீரியல் முடிவு பெற்ற நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த ஜோடியின் காதல் பல நாட்களாக நீடித்து வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சஞ்சீவ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த அவர்களது ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இவர்களது திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது . தற்போது இது சஞ்சீவின் மனைவியின் பிறந்த நாளன்று நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டும் இல்லாமல் ரகசியமாக இந்த கல்யாணம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து சஞ்சீவே காரணத்தை தெரிவித்துள்ளார். சில பிரச்சனை காரணமாக திருமணத்தை வெளியே சொல்ல முடியவில்லை என்றும் ஆனால் அல்யா பிறந்த நாளன்று நாங்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். இது குறித்து விசாரித்த போது திருமணத்தின் போது அல்யா முஸ்லீமாக மாற மறுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பிரச்சனையை சமாளித்து அவரை முஸ்லீமாக மாற சமாதானம் செய்து பிறகு சஞ்சீவ் திருமணம் செய்ததாக சொல்கிறார்கள்.