முகப்பருவை விரட்டும் கற்றாழை..உடலை பளபளப்பாக்குவது மட்டுமன்றி குடலையும் குளிர்ச்சியடைய செய்கிறது..

வீட்டுத் தொட்டியில் எந்த பராமரிப்பும் இல்லாமலே சிறப்பாக வளரக்கூடியது கற்றாழை. இதனை அழகு மருத்துவர் என்றே அழைக்கிறார்கள்.


  • குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல் அல்லது சாறு தேய்த்து மசாஜ் செய்துகொண்டால் பொடுகு நீங்கி பளபளப்பான கூந்தல் கிடைக்கும்.
  • கற்றாழை ஜெல் சாறு எடுத்து நிறைய தண்ணீர் சேர்த்து குடித்துவந்தால் வயிற்றுப்பூச்சி, வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்னைகள் தீரும்.
  • முகத்தில் பரு, கரும்புள்ளி, மரு போன்ற பிரச்னையைத் தீர்ப்பதற்கு கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள் கலந்து போட்டால் போதுமானது.
  • உடல் பளபளப்பு அடையவும் குளிர்ச்சி அடையவும் வாரம் ஒரு முறை ஒரு விள்ளல் கற்றாழை ஜெல் சாப்பிட்டு வரலாம்.