ஸ்டாலின் சார், இதுக்கு ஒரு அனைத்துக்கட்சி கூட்டமா?

ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் பிசுபிசுத்து நமநமத்துப் போய்விட்டதாக புகார்.


பொழுது போகலையா... வா பீச்சுக்குப் போய் வேடிக்கை பார்க்கலாம் என்ற ரீதியில் சும்மா கிடந்த கட்சிக்காரர்களை எல்லாம் ஒன்றால் கூட்டி, மிக்சர், காபி குடித்து கலைந்திருக்கிறது ஸ்டாலின் கூட்டணி.தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில்காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பா... அரசு அனுமதி வழங்கியுள்ளதை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்போகிறார்கள் என்று பார்த்தால், தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். போனால் போகிறது என்று திருச்சியில் ஒரு கண்டன போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.இந்தக் கூட்டத்தில் வேலை இல்லாமல் கலந்துகொண்டவர்கள் பட்டியல் அதிர வைக்கிறது.
மு..ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன்,, வி. அன்புராஜ், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம், எஸ். திருநாவுக்கரசர் , வைகோ, மல்லை சத்யா. பாலகிருஷ்ணன், செயலாளர், தமிழ் மாநில குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,, இரா. முத்தரசன், தமிழ் மாநில குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மு. வீரபாண்டியன்,
துணைச் செயலாளர், தமிழ் மாநிலக்குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. . கே..எம். முகமது அபுபக்கர், எம்.எல்.., மாநில பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், யூசுப் குலாம் முகமது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக். தொல். திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ரவிக்குமார், பொதுச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அப்துல் சமது, பொதுச்செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி, கோவை உமர், பொருளாளர், மனிதநேய மக்கள் கட்சி, ஆகியோர் கலந்து கொண்டனர்.


இத்தனை பேரும் சேர்ந்து கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்திருக்கும் மத்திய பா... அரசுக்கு, கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் பார்த்து மோடி நடுநடுங்கிப் போயிருப்பார் என்று கண்டிப்பாக நம்பலாம்.

ம்... நமக்கு ஆளும் கட்சியும் சரியில்லை, எதிர்க் கட்சியும் தேறலை..!