ஒருசேர அனைத்துக் கட்சிகளும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளன! ஸ்டாலின் சொன்னா கேட்க மாட்டோம்…

பெரியண்ணன் பாணியில் கூட்டணிக் கட்சிகளை அடக்கியொடுக்க நினைத்த ஸ்டாலினுக்கு ஒருசேர அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. வைகோகூட ஸ்டாலின் பேச்சை கேட்க மாட்டேன் என்று முடிவெடுத்ததுதான் ஆச்சர்யம்.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவுக்கு கொடுக்கப்பட்ட ஒரு இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சியின் கணேசமூர்த்தி போட்டியிட்டார். அதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.

ஆனால், இந்த இரண்டு கட்சிகள் மட்டுமின்றி முஸ்லீம் லீக் கட்சியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று இப்போதே உறுதியாகவும், வெளிப்படையாகவும் அறிவித்துவிட்டன.

இதில் ஒரு விஷயம் என்னவென்றால், இதுவரை தி.மு.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும், ‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்’ என்று கேட்கவே இல்லை. அப்படிப்பட்ட சூழலிலே கூட்டணிக் கட்சிகள் எதிர்த்து நிற்கின்றன என்றால்… தேர்தலுக்குள் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ..?