மதுமிதா தற்கொலைக்கு முயல காரணம் யார்! பிக்பாஸ் வீட்டில் அன்று நடந்தது என்ன? கஸ்தூரி வெளியிட்ட சீக்ரெட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிப்பவர்கள் அனைவரும் பொம்மைகள் என்று நடிகை கஸ்தூரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்ற பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக நடிகை கஸ்தூரி பங்கேற்றார். அப்போது அவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அவர் வெளியேறினார். இந்த சீசனில் வைல்ட்கார்ட் மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் கஸ்தூரி நுழைந்தார்.

கஸ்தூரி உள்ளே நுழைந்தவுடன் நிறைய பூகம்பங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நினைத்ததைப்போல் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் கஸ்தூரி சென்ற வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் அவருக்கு ரகசிய அழைப்பு செல்வதற்கான வாய்ப்பை வழங்கினார் ஆனால் கஸ்தூரி தன்னுடைய குழந்தைகளுக்காக நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் கஸ்தூரி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது,"பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பொம்மைகளாக இருக்கின்றனர். இவர்களை ஆட்டி வைப்பது பிக்பாஸ் தான்.

பிக்பாஸ் தமிழ்நாட்டு மக்களுக்கு எவற்றை காண்பிக்க வேண்டும் என நினைக்கிறார் என்பது தெரியவில்லை. மதுமிதா விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஷெரீனும் லாஸ்லியாவும் தான். ஷெரீன் தான் மிகவும் முக்கியமானவர்" என்று பேட்டியளித்தார். இந்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.