மந்திரி பதவி! மாவட்டச் செயலாளர்! ஸ்டாலின் வலையில் செந்தில் பாலாஜி வீழ்ந்த ரகசியம்!

தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அமைச்சர் பதவி என்று கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்தே செந்தில் பாலாஜி கட்சி மாற ஒப்புக் கொண்டுள்ளார்.


   ஒரு வழியாக டீலிங் பேசி முடிக்கப்பட்டு நாளை காலை கரூரில்இருந்து சென்னை புறப்படுகிறார் செந்தில் பாலாஜி. அவருடன் அவரது ஆதரவாளர்கள் சுமார்4 ஆயிரம் பேரும் சென்னை வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  முதற்கட்டமாகநாளை மறு நாள் ஸ்டாலினை சந்தித்து செந்தில் பாலாஜி தன்னை தி.மு.கவில் இணைத்துக்கொள்கிறார்.

   அதன் பிறகு இந்த மாதஇறுதியில் கரூரில் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்து தனது ஆதரவாளர்களை தி.மு.கவில்இணைத்து விடுகிறார் செந்தில் பாலாஜி. இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும்சுமூகமாக முடிந்து செந்தில் பாலாஜியின் கோரிக்கைகள் அனைத்தையும் தி.மு.க தரப்புஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தினகரனின்வலதுகரம் போல் இயங்கி வந்த செந்தில் பாலாஜி திடீரென தி.மு.கவில் இணைவதற்கான காரணம்குறித்து தெரியவந்துள்ளது.

எம்.எல்.ஏக்கள்தகுதி நீக்க வழக்கில் எதிர்மறையான தீர்ப்பு வெளியான பிறகு தினகரன் மீதானநம்பிக்கையை அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் இழக்க ஆரம்பித்தனர். இதன்தொடர்ச்சியாக இரட்டை இலை சின்ன வழக்கிலும் தினகரனுக்கு எதிரான டெல்லி நீதிமன்றஉத்தரவு அ.ம.மு.க நிர்வாகிகளை கலக்கம் அடையச் செய்தது. இந்த நிலையில் கஜா புயல்நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டிய தினகரன் கட்சிப்பணிகளை பெரிதாககண்டுகொள்ளவில்லை.   அதிலும் செந்தில்பாலாஜி போன்ற சீனியர்களை தினகரன் பொருட்படுத்தாமல் தனது பாணியில் அரசியல் செய்யஆரம்பித்துள்ளார். மேலும் தன் மீதான வழக்கை முடிக்கும் வேலையில் இறங்கிய தினகரன்டெல்லியில் உள்ள சிலருடன் ரகசிய டீலிங் பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்தேசெந்தில் பாலஜிக்கு தினகரன் மீதான நம்பிக்கை முற்றிலும் தகர்ந்தது. மேலும்டெல்லியுடன் தினகரன் அனுசரணையாகிவிட்டால் நாம் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைவரும் என்று செந்தில் பாலாஜி கருதியுள்ளார்.


தி.மு.கவின் கரூர்மாவட்டச் செயலாளராகவும், அம்மாவட்டத்தில் தி.மு.கவின் அசைக்க முடியாத சக்தியாகவும்இருப்பவர் கே.சி.பழனிசாமி. கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமான வரித்துறை சோதனை மற்றும்குவாரிகளில் ஏற்பட்ட வில்லங்கம் போன்றவற்றால் தொழில் முடங்கி வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார் பழனிசாமி. மேலும் பழனிசாமி தற்போது கரூரிலேயே இருப்பதில்லை என்றும்சொல்கிறார்கள்.

   பெரும்பாலும் ஈரோடுஅருகே உள்ள தனது பண்ணை வீட்டிலேயே பொழுதை கழிப்பதாகவும், கட்சி நிகழ்ச்சிகள்,கட்சிக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிகளிலும் பழனிசாமி  தலைகாட்டுவதில்லை. இதனால் பழனிசாமி மீதுதி.மு.க மேலிடம் சற்று அதிருப்தியிலேயே இருந்துள்ளது. இந்த நிலையில் தான் செந்தில்பாலாஜி தினகரன் மீது அதிருப்தியில் இருக்கும் தகவல் வெளியானது.மேலும் செந்தில் பாலாஜியின்மனநிலையை அறிந்து அவர் கட்சி மாற தயார் என்கிற தகவல் தி.மு.க மேலிடத்திற்குஎட்டியது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை தி.மு.கவிற்கு சேதாரம் இல்லாமல்கொண்டு வரும் பொறுப்பு ஆ.ராசாவுக்கு கொடுக்கப்பட்டது. சுமார் மூன்று நாட்கள்திருச்சியிலேயே முகாமிட்டு செந்தில் பாலாஜியுடன் பேசி டீலை முடித்துள்ளார் ராஜா.இந்த பேச்சுவார்த்தையின் போது செந்தில் பாலாஜி முன்வைத்தது மூன்று கோரிக்கைகளாம்.ஒன்று தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவி, மற்றொன்று அரவக்குறிச்சியில் மீண்டும்போட்டியிட வாய்ப்பு.

   மற்றொன்று தி.மு.கஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவி. இந்த மூன்று கோரிக்கைகளுக்கும் உடனடியாக தி.மு.கதரப்பில் இருந்து சாதகமான பதில் வந்துள்ளது. கட்சியில் சேர்ந்த ஒரு மாதத்தில்மாவட்டச் செயலாளர் பதவியை தருவதாக ஸ்டாலினே செந்தில் பாலாஜியிடம் போனில்கூறியதாகவும், இதனை தொடர்ந்து தி.மு.கவில் இணைவதற்கான நாளை செந்தில் பாலாஜிகுறித்ததாகவும் சொல்லப்படுகிறது.


தினகரன்அணியில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜி பணத்தை தண்ணீராக செலவழித்துள்ளார். ஆர்.கே.நகர்தேர்தல் முதல் முறையாக அறிவிக்கப்பட்ட போது தினகரனுக்கு செந்தில் பாலாஜி லம்பாக 5கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட தேர்தல்மீண்டும் நடைபெற்ற போது 3 கோடி ரூபாய் வரை செந்தில் பாலாஜி செலவு செய்ததாகவும்சொல்லப்படுகிறது.   இது தவிர திருச்சிபொதுக்கூட்டம், கோவை பொதுக்கூட்டம் போன்றவற்றுக்கான செலவுகளை ஏற்ற வகையில் சுமார்ஒரு கோடி ரூபாயை செந்தில் பாலாஜி இறக்கியதாக சொல்லப்படுகிறது. இதர செலவுகளும்எப்படியும் ஒரு கோடி ரூபாயை தாண்டும் என்கிறார்கள். எந்தவித வரவும் இல்லாமல்சுமார் 10 கோடி ரூபாய் வரை செலவு செய்தும், எதிர்காலத்தில் என்ன நன்மை? என்கிறகேள்விக்கு விடை கிடைக்காததால் தான் கிடைத்த வாய்ப்பாக தி.மு.கவில் இணைய செந்தில்பாலாஜி ஒப்புக் கொண்டுள்ளார்.