பறக்கும் தட்டில் பூமிக்கு வந்த வேற்றுகிரகவாசிகள்..! பறந்து செல்லும் வீடியோ வைரல்..! எங்கு தெரியுமா?

வேற்று கிரகவாசிகள் என கூறப்படும் ஏலியன்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பறந்து சென்றதாக கூறப்படும் வீடியோ தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.


கண்ணுக்கு புலப்படாத ஏலியன்கள் இருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியானாலும், அதைப்பற்றி இன்னும் நிரூபணம் செய்யப்படவில்லை என்றே கூறலாம். ஏலியன்களின் உண்மைத் தன்மையை குறித்து கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த பெனிஃபீல்ட் என்பவர் ஏலியன் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டார்

பெரும்பாலான ஏலியன்கள் அமெரிக்காவின் ஏரியா 51 பகுதியில்தான் வலம் வருவதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவைத்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கியுள்ளா. பெனிஃபீல்ட் என்பவர். கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த 48 வயதான பெனிஃபீல்ட் கட்டுமான தளத்தில் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் ஏலியனின் பறக்கும் தட்டை நீராழி கண்டதாக கூறுகிறார். இதை பெனிஃபீல்ட் ஜூலை 23, 2018 அன்று பார்த்துள்ளார். இந்த காட்சிகளை தன்னுடைய மகனிடம் காட்டியுள்ளார். எனினும் முழுமையான நம்பகத்தன்மை இல்லாததால் அப்பொழுது இந்த விடியோவை வெளியிடவில்லை.  பெனிஃபீல்ட் சமீபத்தில் அவரின் கேலரியில் இந்த வீடியோவை பார்த்துள்ளார்.

இம்முறை சந்தேகம் எதுவும் இல்லாமல் நிகழ்ந்த நிகழ்வை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வெளியிட்டுவிட்டதாக கூறியுள்ளார். பொதுமக்களுக்கும் இதுபோன்ற செய்திகள் சென்றைடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தற்போது விஞ்ஞானிகளும் இந்த வீடியாவை பார்த்தவுடன் ஏலியன்கள் குறித்த ஆய்வினை சுறுசுறுப்பு படுத்தி உள்ளனர்.