அழகிரி திடீர் முடிவு... அதிர்ச்சியில் ஸ்டாலின்... திகிலில் தி.மு.க.

இனிமேல் வாய் திறக்கவே மாட்டார் என்று கருதப்பட்ட மு.க.அழகிரி ஜனவரி 3ம் தேதி திடீரென அதிரடி அறிவிப்பு வெளியிட்டு, கடும் பரபரப்பைக் கிளப்பிவிட்டார்.


மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள துவாரகா பேலஸ் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு அழகிரியின் ஆதரவாளர்கள் சுமார் 25 ஆயிரம் பேர் வரை கூடியதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அனைவருமே தி.மு.க.வின் அதிருப்தியாளர்கள் தான்.

இதுவரை ட்வீட் மூலம் மட்டுமே ஸ்டாலினை தாக்கியிருக்கும் அழகிரி, முதன்முறையாக நேரடித் தாக்குதலில் ஈடுபட்டார். ஸ்டாலினுக்கு பதவி வாங்கிக்கொடுத்ததே நான் என்று அவர் தெரிவித்தார். அதாவது தி.முக.வில் பொருளாளர் பதவியும், துணை முதல்வர் பதவியும் அழகிரியால் கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து, ‘இது அண்ணாவின் மீது கலைஞர் மீது ஆணை. இதை அவர் மறுக்க முடியுமா? ஆனால் அவர் ஏன் இப்படி எனக்கு துரோகம் செய்கிறார் என்று தெரியவில்லை. என்று பொங்கினார். ஸ்டாலின் எப்போதுமே முதல்வராக முடியாது. போஸ்டர்களில் மட்டும்தான் வருங்கால முதல்வரே என்று போட்டுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார் அழகிரி.

மேலும் அவர், ஏழு வருடமாக சும்மாதான் இருக்கிறேன். இப்போது என் ஆதரவாளர்கள் இங்கே நிறைய பேசியிருக்கிறார்கள். நான் நல்ல முடிவெடுப்பேன். அது நல்ல முடிவாகவோ அல்லது கெட்ட முடிவாகவோ கூட இருக்கலாம். எந்த முடிவாக இருந்தாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். எத்தனையோ பேரை மந்திரியாக்கியிருக்கிறேன். எவனுக்கும் நன்றி கிடையாது. ஆனாலும் உங்களுக்காக ஒரு தொண்டன் அழகிரி இருக்கிறான்” என்று முடித்தார் அழகிரி.

அழகிரியின் பேச்சு அரசியல் வட்டாரங்களை அதிர வைத்துள்ளது. குறிப்பாக தி.மு.க.வினரை கதிகலங்க வைத்திருக்கிறது. கடந்த தேர்தலில் கொஞ்ச ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் தோல்வியைத் தழுவியது தி.மு.க. இப்போதும் அதேபோன்று அழகிரி ஆதரவாளர்களால் தோல்வி கிடைத்துவிடுமோ, பத்தாண்டு கனவு பலிக்காதோ என்று தி.மு.க.வினர் திகில் அடைந்துள்ளனர்.

இப்படி வெளிப்படையாக போட்டு உடைத்துவிட்டாரே என்று ஸ்டாலின் அதிர்ந்து வருகிறார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஸ்டாலின் டீம் தீவிர ஆலோசனையில் இருக்கிறதாம்.

பரிதாபம்தான்.