கர்ப்பமானால் என்ன செய்ய வேண்டும்? திருமணம் ஆகாத கமல் மகளுக்கு தாய் எடுத்த பாடம்!

நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் விக்ரமின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை அக்ஷரா ஹாசன் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது .


சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த கடாரம் கொண்டான் ட்ரைலர் சினிமா ரசிகர்களின் பாராட்டுதலை பெற்றது. ராஜேஷ் செல்வா இயக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.கமலின் இரண்டாவது மகளான அக்ஷராஹாசன்  கடாரம் கொண்டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார் . மேலும் இவருக்கு ஜோடியாக குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகர் நாசரின் மகன் நடித்துள்ளார். கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடிகை அக்ஷராஹசன்  கர்ப்பிணிப் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார் . 

ஒரு கர்ப்பிணிப் பெண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி நடிகை அக்ஷரா ஹாசனுக்கு  அவரது அம்மா சரிகா கற்றுதந்துளார் . மேலும் இதைப் பற்றி கூறிய நடிகை அக்ஷராஹாசன்  கர்ப்பிணிப் பெண் வேடத்தில் நடிப்பதற்கு என் அம்மா  சரிகாவிடம் இருந்து  கர்ப்பிணிப் பெண்கள் செய்யும் சிறு சிறு சைகைகளை கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார் . தனது முதல் படமான  விவேகம் படத்தில் நடிகை அக்ஷராஹசன்  நடிகர் அஜித்துடன்  முக்கியமான ரோலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .