ஏழை ரசிகன் வீட்டில் டீ..! லாங் பைக் டிரிப்பில் தல செய்த நெகிழ்ச்சி செயல்..! புகைப்படத்தை வெளியிட்ட நண்பர்..!

லாங் பைக் ட்ரிப்பின் போது நடிகர் அஜித் ஏழை ரசிகன் வீட்டில் டீ குடித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவத்தை நடிகர் அஜித்தின் நண்பர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் ஆவார். திரைப்பட பின்னணி எதுவும் இல்லாமல் தன்னுடைய கடினமான உழைப்பு மற்றும் திறமையான நடிப்பின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் அஜித். நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்தாலும் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைத்து பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது அவர் சினிமாவில் டாப் ஹீரோக்களின் பட்டியலில் உள்ளார். மேலும் அன்று முதல் இன்று வரை நடிகர் அஜித் மிகவும் எளிமையாகவும் நேர்மையாகவும் இருந்து வருவதால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு நடிகர் நடிகைகளுக்கும் நடிகர் அஜித்தை மிகவும் பிடிக்கும். 

கடந்த மே 1ம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் கூறும் விதமாக பல்வேறு ஹேஸ்டாக்கள் போட்டு அவரது ரசிகர்கள் அதை டிரென்ட்டிங் செய்தார்கள். இந்நிலையில் அஜீத்துடன் வீரம் திரைப்படத்தில் இணைந்து நடித்த சுஹைல் சந்தோக் என்பவர் நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதோடு அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடந்த நிகழ்வு ஒன்றை புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார்.

அந்தப் பதிவில் அவர் நானும் அஜித் சாரும் பைக் ரைட் சென்றிருந்த போது வழியில் டீ குடிக்க ஒரு சிறிய கடையில் நிறுத்தினோம். அவர்கள் தங்களது குடிசையில் வந்து டீ குடிக்க அஜித் சாரையும் என்னையும் அழைத்தார்கள். டீ குடித்த பின்னர் அஜித் சாருடன் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார்கள். எனினும் அஜித் சாரிடம் கேட்க அவர்கள் தயங்கினார்கள். இதை அறிந்த நடிகர் அஜித் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி அந்த ஏழை குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து அதை பிரிண்ட் போட்டு கொடுத்தார் எனவும் அந்த நடிகர் தனது பதிவில் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த டீ கடை நடத்துவோர் குடும்பத்துடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் செய்த மனதை நெகிழவைக்கும் சம்பவம் மற்றும் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.