48 வயதாகும் தல அஜித்துடன் டூயட் பாடப்போகும் 22 வயது வாரிசு நடிகை! யார் தெரியுமா?

தல அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படமான AK60 திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


போனி கபூரின் தயாரிப்பில் வினோத்தின் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி  நேர்கொண்ட பார்வை திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது .

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் போனிகபூரின் தயாரிப்பில் வினோத்தின் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் . இந்த படத்தின் பூஜை வருகிற ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் போடப்படும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர்  ட்விட்டரில் அறிவித்திருந்தார் .

மேலும் இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை ஜான்வி கபூர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .