அஜித் வேஷம் கலைஞ்சு போச்சு... ரஜினிதான் மாஸ்

தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களை விஸ்வாசத்திற்காக புக் செய்துவிட்டதாக அஜித் புரளி கிளப்பி, ரஜினி படத்தை தள்ளிப்போட நினைத்தார். ஆனால், வேஷம் கலைந்துவிட்டது என்கிறார்கள்.


ரஜினி நடித்த பேட்ட படத்தை எப்படியாவது பொங்கல் போட்டியில் இருந்து விலக்கிவிட வேண்டும் என்று திட்டமிட்டே அஜித் ஆட்கள் வெற்றுப் புரளி கிளப்பியது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 70 தியேட்டர்களை விஸ்வாசம் படக் குழுவினர் அட்வான்ஸ் புக்கிங் செய்துவிட்டதாக தகவல் வெளியானது. அதனால் ரஜினி படத்துக்கு ஓட்டை, உடைச்சல் தியேட்டர் மட்டுமே கிடைக்கும் என்று சொல்லியிருந்தார்கள்.

அதனால் ரஜினி படத்தை தமிழ் புத்தாண்டுக்கு வெளியிடலாம் என்று கருத்தைப் பரப்பினார்கள் ரஜினிகூட, தள்ளி வைத்தால் தவறு இல்லை என்று சொல்லியதாக செய்தி பரவியது. ஆனால், இப்போது அஜித் சாயம் வெளுத்துவிட்டது. ஆம், தமிழகம் முழுவதும் இதுவரை ஒரே ஒரு தியேட்டரைக்கூட விஸ்வாசம் படக் குழுவினர் புக் செய்யவில்லை என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அதே போன்று ரஜினி படம், அஜித் படம் இரண்டும் கிடைக்கிறது என்றால், எங்களுடைய முதல் விருப்பம் ரஜினி படம்தான். அதுதான் பெண்கள், குழந்தைகள் அனைவரும் பார்க்கும் வகையில் அமையும் என்று சொல்கிறார்கள்.

அதனால் இப்போது பேட்ட படம் பொங்கலுக்கு வருவது நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதியாகியுள்ளது. விஸ்வாசம், பேட்ட இரண்டு படமும் நேருக்கு நேர் மோதுகின்றன. 

ஜெயிக்கப்போவது யாரென்று பொங்கலுக்குத் தெரிந்துவிடும்.