ஹீரோயின் ஆன பிறகும்

ஐஸ்வர்யா ராஜேஷ்  "அவர்களும் இவர்களும்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீசான "கனா" திரைப்படத்தில் நடித்து பெரும் புகழை பெற்றார் . இதன் மூலம் அவருடைய மார்க்கெட் நிலவரமும் உயர்ந்தது என்று கூறலாம். இருப்பினும் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக "எங்கவீட்டுப்பிள்ளை" திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதேபோல் விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக "வானம் கொட்டட்டும்" படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஹீரோயினாக நடிப்பதை விட்டுவிட்டு ஏன் தங்கை வேடங்களில் நடிக்கிறார்கள் ? என்று ஐஸ்வர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், இதற்கு முன் "காக்கா முட்டை" திரைப்படத்தில் நான் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக கூட நடித்து உள்ளேன் .

இப்போது தங்கையாக நடிக்கிறேன் இதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறியுள்ளார். நான் தாயாக நடித்த காக்கா முட்டை திரைப்படம் தான் எனக்கு வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது . ஆகையால் நான் என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும் எந்த திரைப்படத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

தற்போது எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படத்தில் நான் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து உள்ளேன் , இனிவரும் காலங்களில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்தால் இந்த பேச்சு மறைந்துவிடும் என நம்புகிறேன் என்றும் ஐஸ்வர்யா கூறினார்.