ஏர்டெல் கஸ்டமர்ஸ் இத செஞ்சா போதும்..! கட்டண உயர்வில் இருந்து தப்பிச்சிடலாம்! என்ன தெரியுமா?

மாத இறுதிக்குள் ரீசார்ஜ் செய்தால் கட்டண உயர்வை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை என்று வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.


ஏர்டெல்,வோடபோன் முதலிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்த மாத தொடக்கத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவது செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் டிசம்பர் 1ம் தேதி முதல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் அதிக கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்தனர். 

ஆனால் இதற்கு ஏர்டெல் நிறுவனம் ஒரு தீர்வை கொடுத்துள்ளது. அதாவது, நவம்பர் 30ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்துகொண்டால் வாடிக்கையாளர்கள் பழைய கட்டணத்திலேயே தொடரலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த சலுகையானது அனைத்து பிளான்களுக்கும் இல்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. அன்லிமிட்டட் காம்போ ஆஃபர் பேக் உபயோகிப்போருக்கு மட்டுமே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியானது பார்த்தல் வாடிக்கையாளர்களுக்கும் சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.