ஜியோ நிறுவனத்தை போன்று இன்கமிங் அழைப்பை வோடபோன், ஏர்டெல் குறைத்துள்ள சம்பவமானது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இனி 25 நொடிகள் தான் உங்க போன் ரிங்கிங் டைம்! ஏர்டெல், வோடாபோன் அதிரடி முடிவின் பரபரப்பு பின்னணி!

இந்தியாவில் உள்ள நிறைய டெலிகாம் நிறுவனங்கள் அழைப்பு நேரத்தை 45 வினாடிகளாக வைத்திருந்தன. முதன்முதலில் ஜியோ நிறுவனம் இந்த நேரத்தை 20 வினாடிகள் ஆக குறைத்தது. அதாவது ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து ஜியோவிற்கு அழைக்கும் போது 20 வினாடிகளில் எடுக்கவில்லை என்றால் கட்டாகிவிடும்.
அது ஏர்டெல் நிறுவனத்துக்கு இன்கமிங் காலாக பதிவாகி விடும். ஏர்டெல் நிறுவனம் ஒரு நிமிடத்திற்கு இன்கமிங் கால் மூலம் 6 பைசா பெறுகிறது. இதனை எதிர்த்து ஏர்டெல் நிறுவனமானது டிராயிடம் புகார் அளித்தனர்.
ஆனால் டிராய் ஜியோ நிறுவனத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஏர்டெல் மட்டும் வோடபோன் நிறுவனங்கள் தாங்களும் நேரத்தை குறைக்கப்போவதாக அறிவித்துள்ளன. அழைப்பு நேரத்தை 25 வினாடிகளாக குறைக்க போவதாக இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பானது வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.