டிசம்பர் முதல் டேட்டா மற்றும் அவுட் கோயிங் கால் கட்டணம் உயர்கிறது..! வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் கொடுத்த அதிர்ச்சி!

டிசம்பர் மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கான டேட்டா மற்றும் கால் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.


கடந்த காலாண்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாயை இழப்பாக சந்தித்தது- மேலும் மத்திய அரசுக்கும் பெரும் தொகையை ஏர்டெல் அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில் ஜியோவுடனான போட்டி காரணமாக குறைக்கப்பட்ட கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏர்டெல்லுக்கு ஏற்பட்டுள்ளது.

அதன்படி வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டண முறைகளை மாற்ற உள்ளதாக ஏர்டெல் கூறியுள்ளது. டேட்டா மட்டும் இன்றி தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தையும் உயர்த்த ஏர்டெல் முடிவு செய்துள்ளது. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் புதிய கட்ட முறை அறிமுகமாக உள்ளது.

இந்த கட்டண உயர்வு போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் ஏர்டெல் கூறியுள்ளது. முன்னதாக வோடாஃபோன் நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தியது.