தண்ணீர் கேட்ட பெண்ணை எட்டி எட்டி உதைத்து பாஜக எம்எல்ஏ! வைரல் வீடியோ!

அகமதாபாத் , பாஜக எம் எல் ஏ பல்ராம் தவாணி அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் போது, அங்கிருந்த பெண் ஒருவரை காலால் எட்டி உதைத்து, கீழே தள்ளுவதும் மற்றொரு நபர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கும் காட்சியும் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலம், அகமதாபத் மெஹானி நகர் பகுதியில் உள்ள பாஜக எம் எல் ஏ பல்ராம் தவாணி கடந்த சனிக்கிழமை  அப்பகுதியில் தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்த வந்த 40 க்கும் மேலானவர்களை சந்தித்து பேசினார், அவர்களின் கோரிக்கை யைப் கேட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக கூறியவர், அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டிருந்த பெண்ணை திடீரென காலால் எட்டி உதைத்து கீழே தள்ளினார்.

பின்னர் உடனிருந்த மற்றொரு நபர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியானதைபடுத்து இதற்கான தான் வருந்துவதாகவும், மேலும் தனது தவறிக்காக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளதாகவும் அவரது தரப்பில் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில்,  நேற்று மெஹானி நகர் காவல் நிலையத்தில் எம் எல் ஏ பல்ராம் தரப்பில் போராட்டகாரர்கள் தன்னை தாக்க முற்பட்டதால் வேறு வழியில்லாமல் தன்னை பாதுகாத்து கொள்ளவும், மேலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் படியாகதான் பல்ராம் தாக்கியதாக அளித்த விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரத பிரமராக மோதி பதவி ஏற்ற பிறகு இஸ்லாமிய நபர் தாக்கபட்ட சம்பவத்தை படுத்து  நடக்கும் இரண்டாவது சர்ச்சைக்குரிய சம்பவம் இது என்பதும் குறிப்பிடதக்கது