தஞ்சை, திருவாரூர், நாகைக்கு நல்ல யோகமடா, சட்டசபையில் வேளாண் மசோதா தாக்கல்..!

காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான சட்ட முன்வடிவு மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.


தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் மசோதாவை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார். அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, கடலூர் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளும், புதுக்கோட்டையில் சில பகுதிகளும் வேளாண் மண்டலாம அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் எண்ணெய், நிலக்கரி, மீத்தேன், துத்தநாகம், இரும்புத்தாது, தோல் பதனிடுதல் போன்ற எந்தத் தொழிலுக்குமே இந்த வேளாண் மண்டலத்தில் அனுமதி இல்லை என்று இந்த மசோதா உறுதியாகக் கூறுகிறது.

இதுவரை இந்த மண்டலத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதனை மத்திய அரசு ஏற்குமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.