நிர்வாணச் சாமியார்கள்..! பம்பை சத்தம்..! நள்ளிரவில் அலறிய திருச்சி..! கொரோனா பீதியில் ஒரு பேரதிர்ச்சி!

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மீண்டு வருவதற்காக அகோரிகள் சிறப்பு பூஜை நடத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 85,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 14,60,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த நோய் தாக்குதல் இந்தியாவில் சில நாட்களாக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதற்கு எதிராக பல்வேறு விஞ்ஞானிகள் மருந்து கண்டு பிடிப்பதற்காக அல்லும் பகலும் போராடி வருகின்றனர். மேலும், பல்வேறு மதத்தினரும் வீடுகளுக்குள் இருந்தபடி, சிறப்பு பூஜைகளை செய்து வருகின்றனர்.

அவ்வகையில் திருச்சியில் அமைந்துள்ள அரியமங்கலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு அகோரிகள் சிறப்பு பூஜை நடத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. திருச்சியை சேர்ந்தவர் அகோரி மணிகண்டன். இவர் கடந்த சில ஆண்டுகளாக காசியில் அகோரிளிடம் சிறப்பு பூஜைகள் செய்வதற்கான பயிற்சியை மேற்கொண்டார்.

அதன் பின்னர் அரியமங்கலத்தில் கவர்ந்து ஜெய்ஸ்ரீ அகோரி காளி சிலையை பிரதிஷ்டை செய்து தினமும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தார். இங்கு விசேஷ காலங்களில் சிறப்பு பூஜைகள் நடை பெறுவதும் உண்டு.

இந்நிலையில் உலக மக்களை இந்த நோய் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பூஜையை அகோரிகள் செய்தனர். அவர்கள் தலைகீழாக நின்று கொண்டு விசேஷ மந்திரங்களை ஜபித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

பூஜையின்போது அகோரி மணிகண்டன் கையில் ருத்ராட்ச மணிகளை உருட்டியபடி மந்திரங்கள் ஓதபட்டு வரமிளகாய் , நவ தானியங்கள், பழங்கள் மூலிகைகள் முதலியவற்றை யாககுண்டத்தில் போட்டு யாகத்தை நடத்தினார். அழைத்து அகோரிகளின் சமூக விலகலை கடைப்பிடித்திருந்ததும் புகைப்படங்களின் மூலம் தெரியவந்துள்ளது

சக அகோரிகள் சங்கு ஒலி எழுப்பியும், ஹர ஹர மகாதேவ் என்ற முழக்கத்தை செய்தும், டம்ரா மேலம் அடித்தும் வழிபட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.