குறைந்த எடை மீண்டும் கிடுகிடு உயர்வு! காண்போரை அதிர வைக்கும் அம்பானி மகனின் உடலமைப்பு! அதிர வைக்கும் காரணம்!

அனந்த் அம்பானி மீண்டும் உடல் எடையை அதிகரித்திருக்கும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உலகில் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவருடைய இளைய மகனின் பெயர் அனந்த் அம்பானி. இவர் தன் சிறு வயதில் இருந்தே ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு வந்தார். 2016-ஆம் ஆண்டில் இவருடைய புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

தன்னுடைய 21-வது பிறந்தநாளுக்கு முன்பாக எப்படியாவது உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். தினமும் 21 கிலோ மீட்டர் நடைபயணம், உடற்பயிற்சி, யோகா முதலியவற்றைத் தவறாமல் தினமும் மேற்கொண்டார். மேலும் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் கிட்டத்தட்ட 2 வருடங்கள் சாப்பிட்டு வந்தார்.

இதனிடையே, 18 மாதங்களில் அவர் 108 கிலோ எடை குறைந்தார். குறைந்தது மட்டுமில்லாமல் தன்னுடைய புகைப்படங்களின் மூலம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தார். ஆனால் சமீபகாலமாக அவருடைய உடல் எடை மீண்டும் அதிகரித்து வருகிறது. மீண்டும் பழைய உடல் தோற்றத்திற்கு மாறியுள்ளார். உலகத்தில் மும்பை மாநகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரின் புகைப்படமானது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த சிலர், மீண்டும் அவர் உடல் எடையை அதிகரித்து இருப்பது குறித்து பல்வேறுவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த செய்தியானது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.