சசிகலா மீது காவல் நிலையத்தில் வழக்கு... மன்னிப்பு கேட்டாலும் இடம் இல்லை... மீண்டும் ஜெயக்குமார் அதிரடி விளக்கம்

எப்படியாவது அ.தி.மு.க.வில் நுழைந்துவிட வேண்டும் என்று சசிகலாவும் தினகரனும் என்னென்னவோ முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், டெல்லியிலேயே சசி, தினகரனுக்கு அ.தி.மு.க.வில் இடம் இல்லை என்று தெளிவாக சொல்லிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


இந்த நிலையில்தான், சசிகலா மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நேரத்தில் காரில் அ.தி.மு.க. கொடி கட்டியிருந்தார். இந்த விவகாரம் அ.தி.மு.க.வை கொதிக்க வைத்தது. இதற்கு தினகரன் மன்னிப்பு கேட்கவும் இல்லை.

ஆகவே, சசிகலா தனது காரில் அதிமுக கொடி பயன்படுத்தியது குறித்து சேலம் அதிமுக நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டவிரோதம் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மன்னிப்பு கேட்டால் சசிகலா சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி அ.தி.மு.க. தொண்டர்களிடையே எழுந்தது. இதுகுறித்து இன்று பேசிய அமைச்சர் ஜெயகுமார், ‘மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் தினகரன், சசிகலா ஆகியோர் கட்சிக்குள் சேர்க்கப்பட மாட்டார்கள். கே.பி.முனுசாமி சொன்னது அவரது சொந்தக் கருத்து‘‘ என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

ஆக, சசிக்கு வழியே இல்லை என்பதுதான் உண்மை.