8 வருடங்களுக்கு பிறகு சூர்யாவுடன் சேர்ந்து..! வேகமாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா..!

சென்னை: நடிகை பூஜா ஹெக்டே மீண்டும் தமிழில் நடிக்க உள்ளதாக, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடித்த படம் முகமூடி. இதில், ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர், அதற்குப் பின் தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காததால், தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். அங்கு குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து பிரபலமாகியுள்ள பூஜா ஹெக்டே, தற்போது மீண்டும் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனை அவரே, ட்விட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அந்த பதிவில், ''ஹலோ, ஹலோ. நான் தமிழில் நடிக்க உள்ளதாக பரவும் தகவல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறேன். தற்சமயம், எந்த படத்திலும் நான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை. ஆனால், சில கதைகளை கேட்டுள்ளேன். அவற்றில் நடிக்கவும் ஆலோசித்து வருகிறேன்.

இந்த ஆண்டிற்குள் நான் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கப் போவது உறுதி,'' என்று தெரிவித்துள்ளார். சில நாட்கள் முன்பாக, ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் அறுவா படத்தில் பூஜா ஹெக்டே, ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமானதாக தகவல் வெளியானது. இதனை பலரும் பரபரப்பாக பகிர்ந்து வந்த நிலையில், பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.