10 ஆயிரம் அடி உயரம்! அந்தரத்தில் பறந்து ஷேவிங் செய்த இளைஞர்! திக் திக் நிமிடங்கள்!

10,000 அடி உயரத்திலிருந்து சாகச வீரர் ஒருவர் தாடியை சரைத்து கொண்ட சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் பென்சில்வேனியா மாகாணம் அமைந்துள்ளது. இங்கு ஷார்க்கி என்ற சாகச வீரர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு பறக்கும் விமானங்களில் இருந்து கீழே குதிப்பது மிகவும் பிடித்தமான சாகசம் ஆகும். இதனை அவர் இதுவரை 399 முறை செய்து வந்துள்ளார். 400-வது முறை வானத்தில் இருந்து கீழே குதிப்பதற்காக சின்ன விமானம் ஒன்றில் சென்றுள்ளார்.

10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது பாராசூட் மூலம் விமானத்திலிருந்து கீழே குதித்துள்ளார். இவருடைய ஹர நண்பரான மேட் கோலின்ஸ் என்பவரும் கீழே குதித்தார். கோலின்ஸ் தன்னிடமிருந்த ட்ரிம்மர் மூலம் ஷார்க்கீக்கு தாடியை சரைத்தார்.

இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.