தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் ..

தீபாவளி பண்டிகை அன்று நாம் ஒவ்வொருவரும் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்தானம் மேற்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளோம்.


வாழ்வில் உள்ள இருளை நீக்கி வெளிச்சத்தை தரும் தீபாவளி நன்னாளில் , அதிகாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கத்தை நாம் அனைவரும் கொண்டாடி வருகிறோம் . பொதுவாக தீபாவளி தினத்தன்று உச்சி முதல் பாதம் வரை உடல் குளிர குளிர எண்ணெய் தேய்த்து வெண்ணீரில் நீராடுவது வழக்கம். நீராடிய பின்பு அசைவ உணவு சமைத்து சாப்பிட்டும் இனிப்புகளை மற்றவர்களுடன் பரிமாறிக் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருவர்.  

நல்லெண்ணெய் குளியலில் மிகப்பெரிய உடலுக்கு ஆரோக்கியம் தரும் நற்பலன்களும் அமைந்துள்ளன. நல்லெண்ணை தேய்த்து குளிப்பதால் இளநரை பிரச்சனை தீரும். மேலும் சளி , இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். மேலும் நல்லெண்ணையில் லக்ஷ்மி வாசம் செய்திருப்பதாகவும் வெந்நீரில் கங்கை வாசம் செய்திருப்பதாகவும் நம் புராணங்களில் கூறப்படுகிறது . ஆகையால் தான் தீபாவளி அன்று நல்லெண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறி வருகின்றனர். தீபாவளி அன்று மட்டுமில்லாமல் ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் ஆண்கள் நீராடவேண்டும். அதேபோல் பெண்கள் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் நீராடுவது குடும்பத்திற்கு நல்லது. ஆனால் இத்தகைய பழக்கவழக்கங்களை நம்முடைய சமுதாய சமுதாயத்தினர் மறந்துவிட்டு வாழ்ந்துவருகின்றனர் . மீண்டும் நாம் பழமையை கடைப்பிடித்து வாழ்வில் வளமுடன் வாழ வேண்டும்.