பசுமை பட்டாசுகளின் நன்மைகள்!

உலகிலேயே முதல்முறையாக பசுமை பட்டாசு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே நாடு நம் இந்தியா தான்.


எதற்காக இவ்வளவு அவசரமாகவும் அதிரடியாகவும் அரசாங்கம் இந்த பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவதற்கு நம் அனைவரையும் வற்புறுத்தி வருகிறது என்று காரணம் நம் அனைவரிடத்திலும் இருந்துகொண்டிருக்கிறது. இந்த பசுமை பட்டாசு வைத்து பின்னால் பயனடைய போவது நாம் அனைவரும் தான் என்ற உண்மையை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அப்படி என்ன மிகப்பெரிய அவசர தேவை நம் நாட்டிற்கு ஏற்பட்டது என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். அதாவது கடந்த ஆண்டு நிகழ்ந்த மரணங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காற்று மாசுபாட்டின் காரணமாக தான் உயிரிழந்திருக்கின்றனர் . 

இந்த குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டதற்கான முக்கிய காரணமே காற்று மாசுபாடு தான். காரணம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று நான் வெடிக்கும் பட்டாசுகள் என்றுதான் கூற வேண்டும். நம் இந்திய நாடு மூன்றாம் நிலை நாடாக உலக அரங்கில் காணப்பட்டு வருகிறது. நம் நாட்டில் பத்தில் ஒரு குழந்தை இறப்பதற்கான காரணம் இந்த காற்று மாசுபாடு என்று ஒரு ஆய்வில் அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் மூச்சுக் காற்றை சுவாசிக்கும் போது இந்த நச்சு காற்றானது அவர்களது மூச்சுக்குழல் உள்ளே சென்று அவர்களுடைய நுரையீரலை பாதித்து அவர்களுக்கு மூச்சுத் திணறலை உருவாக்கி உயிர் இழக்க வைக்கிறது. அந்த அளவிற்கு தூய்மை இல்லாத ஒரு காற்றை தான் நாமும் நம்முடைய குழந்தைகளும் சுவாசித்து வருகிறோம். நம்முடைய எதிர்கால சந்ததியினரும் சுவாசிக்க போகின்றனர். இந்த தூய்மை இல்லாத காற்றை மேலும் தூய்மை இல்லாததாக மாற்றக் கூடாது என்பதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அரசும் இணைந்து செய்த புதிய முயற்சிதான் இந்த பசுமை பட்டாசுகள். 

முதலில் நம்முடைய அரசாங்கம் பட்டாசுக்கு முற்றிலுமாக தடை விதிக்கலாம் என்று ஆலோசித்த போது பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கானோர் இன் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தான் இதற்கான மாற்று வழி என்ன என்று ஆராய ஆரம்பித்தனர். தற்போது அதற்கான மாற்று வழியான பசுமை பட்டாசுகளையும் கண்டுபிடித்து விட்டனர். பசுமை பட்டாசு என்பது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுப் பொருட்களை தவிர்த்து உருவாக்கப்படும் பட்டாசுகள். இந்த பசுமை பட்டாசுகளை பயன்படுத்தி நாம் வெடிகள் வெடிக்கும் பொழுது நம்முடைய சுற்றுச்சூழலை நம்மால் பாதுகாக்க இயலும் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் கூறுகிறது. தற்போது இந்த பசுமை பட்டாசுகள் 

 சென்னை உள்ளிட்ட நாட்டில் பல இடங்களிலும் பரவலாக விற்க தொடங்கியுள்ளது . இதனைப் பயன்படுத்தி நம்முடைய இந்த தீபாவளி பண்டிகையை சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத தீபாவளி பண்டிகையாக நாம் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.