நவராத்திரி விழாவால் ஏற்படும் ஏராளமான நன்மைகள்!

நவராத்திரி விழாவில் விரதமிருந்து கொலுவைத்து கொண்டாடினால் ஏராளமான நன்மைகள் நடைபெறும் என்பது நம் முன்னோர் காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது .


ஒன்பது நாட்கள் கொலுவைத்து கோலாகலமாக கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாவில் முதல் மூன்று நாட்களில் துர்க்கையை வேண்டியும் ,அடுத்த மூன்று நாட்களில் லஷ்மி தேவியை வேண்டியும் ,கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் வேண்டியும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது .

மனிதர்கள் தங்களது ஆன்மீக சிந்தனைகளை படிப்படியாக வளர்த்துக் கொண்டு இறுதியாக இறைவனுடன் இணைய வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே நவராத்திரி திருவிழாவில் கொலு பொம்மைகள் படிகள் அமைக்கப்பட்டு அலங்கரிக்க படுகின்றன .  நவராத்திரி திருவிழா காலங்களில் வீட்டில் கொலுவைத்து வழிபட்டால் அம்பிகை வீட்டில் குடியேறுவார் என்பது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது