பல பேர் வந்து செல்லும் கடையில் 9 மணி நேரம் தொடர்ந்து ஓடிய ஆபாச படம்! அசர வைக்கும் காரணம்!

பிரபல கடையின் திரையில் ஆபாச படம் ஓடிய சம்பவமானது ஆக்லாந்து நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நியூசிலாந்து நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஆக்லாந்து நகரமும் ஒன்று. இங்கு பிரபலமான விளையாட்டு நிறுவனத்தின் ஷு கடை அமைந்துள்ளது. இந்த கடையின் முன்பு மிகப்பெரிய திரை அமைக்கப்பட்டிருக்கும். அந்தத் திரையில் விளையாட்டு நிறுவனத்தில் புதுப்புது பொருட்கள் குறித்த விளம்பரங்கள் வெளியாகும். கடை மூடப்பட்டாலும் விளம்பரங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவன்று, விளையாட்டு பொருட்களின் விளம்பரம் அல்லாது ஆபாச படங்கள் பெருந்திரையில் வெளியாயின. இது அந்த கடையை கடந்து சென்ற மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழியே சென்ற பொதுமக்கள் சிலர் விளையாட்டு நிறுவனத்தை கடுமையாக திட்டிக்கொண்டே சென்றனர். இதனால் அப்பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் கடைக்கு விரைந்து வந்த உரிமையாளர் அதனை நிறுத்தினார். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் ஊடகங்கள் கூறுகையில், "எப்படி இவ்வாறு நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. இது நோக்கத்துடன் செய்யப்பட்டது அல்ல. இதுகுறித்த விசாரணையை தொடங்க உள்ளோம். இந்த சம்பவம் குறித்து ஆக்லாந்து நகரத்து மக்களிடையே பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறோம். தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள்" என்று விளையாட்டு நிறுவனம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவமானது ஆக்லாந்து நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.