எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு விழுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு ஓட்டு! சற்று முன் வெளியான திடுக் தகவல்!

நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் அங்கனூரில் திருமாவளவன் தனது வாக்கை பதிவு செய்தார். இதன்பிறகு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது இரவில் மின்சாரத்தை துண்டித்துவிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்ததாக திருமாவளவன் குற்றம் சாட்டினார். தொடர்ந்து இன்று காலை பல்வேறு தொகுதிகளில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு பதிவு செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார். எவ்வளவுதான் சரி செய்தாலும் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் 38 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வெல்வது உறுதி என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.