தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 8 மாதங்களில் 10 மடங்காக அதிகரித்து 49.8% சதவீதமாக ஆகியிருக்கிறது என்றும் 90 சதவீதம் வீடுகளில் ஒருவர் வருமானம் இழந்து இருக்கிறார் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மீண்டும் தப்பும்தவறுமாக உளறிக்கொட்டிய ஸ்டாலின்... புள்ளி விவரங்களுடன் தெறிக்கவிட்ட அ.தி.மு.க.

திமுக தலைவர் ஸ்டாலின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது பதில் கருத்துக்களை கூறியுள்ளனர். இதுபற்றி கருத்துக் கூறிய பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தினமும் காலையில் ஏதாவது கருத்து சொல்றேன்னு தப்பான புள்ளிவிவரங்களை சொல்வதே இவருக்கு வேலையா போச்சு. கொரோனா உச்சத்தில் இருந்த ஏப்ரல் மாத புள்ளிவிவரத்தை(49.8%) ஆகஸ்ட் மாதத்தில் (8.1%)வெளியிட்டு அவர் ஒரு விஷமறியா வாரிசுன்னு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ஸ்டாலினின் கருத்துக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் உங்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் கிடையாது என்பது உலகறிந்த விஷயம். துண்டுச் சீட்டு எழுதிக் கொடுக்கும் ஆட்களிடமாவது சரியான தகவலை கேட்டுப் பெறுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் அதிமுகவின் வேலூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் கோவை சத்யன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக ஸ்டாலினின் கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில் வேலைவாய்ப்பின்மை 2019ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழகத்தில் 5.7 சதவீதமாக இருந்தது என்றும், 2020 ஏப்ரல் மாதத்தில் 49.8 சதவீதமாக மாறியது என்றும், 2020 ஜூலை மாதத்தில் 8.1 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் கொரோனா காலத்திலும் 30,500 கோடி முதலீடு ஈர்த்து வேலைவாய்ப்பினை உறுதி செய்தது அம்மாவின் அரசு என்றும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.
மேலும் அதிமுகவின் சென்னை தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக ஸ்டாலினின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார். அந்த பதிவில் அவர் 2019 டிசம்பரில் தமிழகத்தில் 5.7 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை கொரோனாவால் இந்தியாவே முடங்கிக் கிடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் 49.8 சதவீதமாக உயர்ந்தாலும் தமிழக அரசின் தீவிர முயற்சியால் கடந்த ஜூலை மாதத்தில் 8.1 சதவீதமாக குறைந்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் 2019 டிசம்பரில் 5.7 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை 2020 ஏப்ரலில் 49.8 சதவீதமாக உயர்ந்து விட்டதாக கூப்பாடிடும் ஸ்டாலினை, மே மாதத்தில் 33% ஆகவும், ஜூனில் 13.5 சதவீதம் ஆகவும், ஜூலையில் 8.1 சதவீதம் வரை குறைத்த அரசின் முயற்சியை பொய் அறிக்கை மறைக்குமோ? எனவும் அவர் அந்த பதிவில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.