செம க்யூட் விஜய்..! வெளியானது லேட்டஸ்ட் புகைப்படம்..! எங்கு எடுத்தது தெரியுமா? அதர்வா சொன்ன சீக்ரெட்!

நடிகர் விஜயுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் அதர்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கியுள்ளார்.


மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.  இவர் தற்போது குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அதர்வா தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து இருக்குமாறு ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதர்வா வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் மிக க்யூட்டாக அதர்வாவுடன் இணைந்து சிரிக்கிறார். இந்த புகைப்படமானது நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளியின் நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி சிங்கப்பூரில் படிக்கும் போது சினேகா பிரிட்டோ என்ற பெண்ணை காதலித்து தற்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். 

சினேகா பிரிட்டோ வின் தந்தை சேவியர் பிரிட்டோ நடிகர் விஜய்யின் மாமா ஆவார். நடிகர் விஜய்யின் மாமா மகளை நடிகர் அதர்வாவின் தம்பி கரம்பிடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிச்சயதார்த்த விழாவில் நடிகர் விஜயுடன் அதர்வா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.