ஆட்டத்தின் 12வது ஓவரில் பால் டேம்பரிங்? வசமாக சிக்கினார் ஆஸியின்., ஆடம் ஜம்பா!

சுழற்பந்து வீச்சாளர் ஆதம் ஜம்பா பால் டேம்பேரிங் செய்வது போல வீடியோ வெளியாகியுள்ளதால் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது 12வது ஓவரை ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆதம் ஜம்பா வீசினார். அப்போது ஜம்பா தனது பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு ஏதோ ஒன்றை எடுத்து பந்தில்  தேய்ப்பது போல வீடியோ வெளியாகியுள்ளது. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

கடந்த வருடம் தான் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்க்கு ஓராண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இப்போது தான் அந்த தடை முடிவடைந்து இவர்கள் இருவரும் உலகக்கோப்பை தொடரில் ஆடி வருகிறார்கள் என்பது குறிப்பித்தக்கது. 

ஆனால் அதற்குள் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த மற்றொரு வீரரான ஆதம் ஜம்பா பால் டேம்பேரிங் சர்ச்சையில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆதம் ஜம்பா பந்தை சேதப்படுத்த முயற்சித்தாரா இல்லையா என்பதை ICC தான் முடிவெடுக்க வேண்டும். 

இந்த போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.