ச்சீ..ச்சீ..! பெண் போலீசிடம் இரவில் அத்துமீறிய திமுக ஒ.செ..! புதுக்கோட்டை அதிர்ச்சி!

குடிபோதையில் பெண் காவலரை அவதூறாக பேசிய திமுக பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் அடைக்கலமணி என்பவர் ஆவார்.‌ இவர் திமுக ஒன்றிய அணி செயலாளராக இருந்து வருகிறார். நேற்றிரவு மதுபோதையில் தன்னுடைய காரில் வந்திருக்கிறார். வளையப்பட்டியில் உள்ள ஐந்தாம் நம்பர் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அந்த வழியாக வந்த அடைக்கலமணியின் காரை போலீசார் சோதனை செய்துள்ளனர். 

அவர் காரை நிறுத்தி விசாரணை செய்த பொழுது பெண் போக்குவரத்து காவலர் ஆன பிரான்சிஸ் மேரியை மிகவும் தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சோதனை செய்ய விடாமலும் தடுத்து நிறுத்தி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் போதையில் இருந்த அடைக்கலமணி அந்தப் பெண் போலீசிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் சலசலப்பு நிலவி வந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தது, மேலும் போதையில் பெண் போலீசை அநாகரிகமாக பேசியது நடந்துகொண்டது உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது அடைக்கலம் அணியை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.