என் உடலைத் தொடத் தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம்..! பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்! காரணம் என்ன தெரியுமா?

உடலை உரசுவதற்காகவே அதிகளவில் இளைஞர்கள் என்னை நெருங்கி வருகின்றனர் என்று பிரபல நடிகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோலிவுட் திரையுலகில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த "நிமிர்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நமீதா பிரமோத். இவர் அந்தப்படத்தில் நன்றாக நடித்திருந்ததால் மக்கள் வரவேற்பு கிடைத்தது. 

இதனிடையே சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது. அதாவது தன்னுடைய வெளியிட அனுபவங்களை பற்றி அவர் கூறியபோது, "என்னை சிறுவர்கள் மற்றும் பெண்கள் சகோதரியாக பாவிக்கின்றனர். அவர்கள் காட்டும் அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. புகைப்படம் எடுத்துக்கொள்வது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் சிலரோ செல்ஃபி எடுக்க வேண்டும் என்ற பெயரில், என் உடல் மீது உரசுவதை குறிக்கோளாக வைத்து வருகின்றனர். இது எனக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் நான் கூட்டம் அதிகமாகவுள்ள இடங்களுக்கு செல்லும்போது பர்தா அணிந்து செல்கிறேன். பர்தாவில் மக்கள் என்னை அடையாளம் காண்பது கண்டு வியக்கிறேன்" என்று கூறியுள்ளார். இந்த பேட்டியானது கோலிவுட் திரையுலகில் வைரலாகி வருகிறது.