பழம்பெரும் பாலிவுட் நடிகை சோனி ரஸ்தான் பல வருடங்களுக்கு முன்னாள் திரைத்துறையில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
வயிற்றுக்குள் குழந்தையை வைத்துக் கொண்டு புகைத்துத் தள்ளிய பிரபல நடிகையின் தாய்! என்னாச்சு தெரியுமா?
1993ம் ஆண்டு தனது கணவர் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட கும்ரா என்ற திரைப்படத்தில் நானும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் நடித்ததாகவும், அந்த படத்தில் நடிக்கும் போது ஒரு காட்சியில் நான் பல சிகரெட்களை பிடிப்பது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அந்த சிகரெட் பிடிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது நான் கற்பமாக இருந்ததாக கூறியுள்ளார்.
ஆனால் அது சிறிது காலத்திற்கு பிறகே அதை நான் அந்த காட்சி எடுக்கும் போது நான் கர்பமாக இருந்ததை உணர்ந்ததாகவும் நடிகை சோனி ரஸ்தான் கூறியுள்ளார். பாலிவுட் நடிகை ஆலியாவின் தாயான இவர் அந்த சிகரெட் பிடிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது ஆலியா தான் என் வயிற்றில் குழந்தையாக இருந்தார் எனவும் பழம்பெரும் பாலிவுட் நடிகை சோனி ரஸ்தான் கூறியுள்ளார்.
மேலும் அந்த படத்தில் ஸ்ரீ தேவியுடன் நடித்தது என் வாழ்நாளில் மிகவும் முக்கியமான தருணம் என்றும் அவர் கூறியுள்ளார். வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு சிகரெட் பிடித்தாக சோனி கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.