விக்ரம் பட நடிகையின் கார் மோதி ஒருவர் பலி! போதையா என விசாரணை!

பிரபல நடிகை


கோவாவில் விக்ரம் பட நடிகையின் கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

   சல்மான் கானின் வீர் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஜரீன் கான். இவர் நடித்த ஹேட் ஸ்டோரி எனும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் இந்தி ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஜரீன் கான் வலம் வருகிறார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடம் ஏற்று நடித்து வரும் ஜரீன் கான் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் குத்தாட்டம் போட்டிருப்பார். மேலும் நடிகர் விக்ரமை வைத்து பூஜை போடப்பட்ட கரிகாலன் படத்திலும் ஜரீன் கான் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க இருந்தார்.

ஆனால் இந்த படம் பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகை ஜரீன் கான் கோவா சென்றுள்ளார். அங்கு காரை டிரைவர் ஓட்ட, பின்னால் அமர்ந்து ஜரீன் கான் சென்று கொண்டிருந்தார்.

   கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது ஜரீன் கான் காரும் – மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து காரை ஓட்டிய அப்பாஸ் மற்றும் காரில் இருந்த நடிகை ஜரீன் கான் ஆகியோரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

   விசாரணையில் ஜரீன் கான் கார் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதே விபத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால், கார் தான் இருசக்கர வாகனம் மீது மோதியதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறினர். இதனால் நடிகை ஜரீன் கானிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக நடிகை ஜரீன் கான் தனது மேலாளர் மீது மோசடி மற்றும் மிரட்டல் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.கவர்ச்சி நடிகை ஜரீன் கான் பெயர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே விசாரணை முடிவில் ஜரீன் கானை போலீசார் விடுவித்தனர்.