வயசுல சின்னபசங்களா தேடிப் பிடிச்சி கல்யாணம் செஞ்ச நடிகைகள்!

பொதுவாக இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடியில் ஆண் வயதில் மூத்தவராகவும் பெண் இளையவராகவும் இருப்பது மரபு இதனை மீறி தன்னை விட வயதில் இளைய ஆண்களை திருமணம் செய்துள்ள நடிகைகள் நிறைய பேர் இந்தியாவில் உள்ளனர்.


வயது குறைவான ஆணை திருமணம் செய்த நடிகை என்று கூறியதும் நம் நினைவுக்கு சட்டென வருபவர் ஐஸ்வர்யா ராய் தான். ஏனென்றால் ஐஸ்வர்யா ராய் தன்னை விட 3வயது இளையவரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2007ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடைபெற்ற நிலையில் சுமார் 12 வருடங்களாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

   அண்மையில் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு திருமணம் நடைபெற்றது. இவர் ஏற்கனவே ஷாகித் கபூர், ஷாருக்கான் உள்ளிட்டோருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட நிலையில் கடைசியில் அமெரிக்க பாடகரான நிக் ஜோனாசை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் பத்து. அதாவது பிரியங்கா சோப்ராவின் வயது 36, அவரது கணவர் நிக்கின் வயது வெறும் 26 தான்.

   நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். அவர் தான் தற்போது அஜித்தின் 59வது படத்தை தயாரித்து வருகிறார். ஸ்ரீதேவியை கல்யாணம் செய்வதற்கு முன்னர் அவருக்கு ஒரு மனைவி உண்டு. அவர் மூலமாக அர்ஜூன் கபூர் என்கிற மகன் போனி கபூருக்கு இருக்கிறார். அர்ஜூன் கபூர் வயதோ 33 தான். ஆனால் அவர் காதலிக்கும் மலாய்க்கார அரோரா வயதோ 45. காதலி மலாய்க்காவை விட அர்ஜூன் கபூருக்கு 12 வயசு குறைவு. இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

   சுஷ்மிதா சென் நம் அனைவருக்கும் நினைவிருக்க வாய்ப்புள்ளது. ரட்சகன் படத்தில் நடித்திருப்பார். சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா என்கிற பாடலில் வரும் அதே நடிகை தான். இவர் நீண்ட நெடுங்காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். ஆனால் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஆனால் திடீரென சுஷ்மிதா சென்னுக்கு 43 வயதில் காதல் மலர்ந்துள்ளது. அதுவும் தன்னை விட 15 வயது இளையவரான ரோஹ்மன் ஷாலுடன் தற்போது ஊர் சுற்றி வருகிறார் சுஷ்மிதா.

   இதே போல் நடிகைகள் பிபாஷா பாசு தன்னை விட 4 வயது இளையவரான கரன் சிங் குரோவரை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். நடிகை நேஹா தூபியா கூட தன்னை விட 3 வயது சின்ன பையனான அங்கத் பேடியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி பிரபல இந்தி நடிகைகள் தன்னை விட இளம் நடிகர்களை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் தமிழ் சினிமாவிலும் கூட ரஜினியின் மகள் ஐஸ்வர்யா அவரை விட 2 வயது குறைவான தனுசை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.